ஃபானி புயல் செய்த கொடுமை !! வீட்டை இழந்து குடும்பத்துடன் டாய்லெட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளி !!

By Selvanayagam PFirst Published May 18, 2019, 8:05 PM IST
Highlights

ஒடிசாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர் தற்போது ஒரு  கழிவறையில் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியயுள்ளது.
 

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ரகுதெவ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரோட் ஜெனா  இவர் ஒரு தினக்கூலி தொழிலாளி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒடிசாவைத் தாக்கிய ஃபோனி புயலால், இவர் தன் வீட்டை இழந்துவிட்டார். 

இதனால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த7க்கு 6 அடி கழிவறையில் இவர் தன் மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.


இது குறித்து அந்த கூலித் தொழிலாளி கூறுப்போது, “புயலில் என் வீடு தரைமட்டமாகிவிட்டது. அதில் மிஞ்சியது இந்த கழிவறை மட்டுமே. நாங்கள் புலம்பெயர வேறு இடம் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு ஒதுக்கப்பட்ட இந்த கழிப்பறை தற்போது எங்களுக்குப் புகலிடமாக இருக்கிறது என தெரிவித்தார்
.
இன்னும் எத்தனை நாட்கள் இந்த கழிவறையில் இருக்கப் போகிறோம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார் ஜெனா. புயலினால் இடிந்த வீட்டை மீண்டும் கட்டத் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் மீட்பு மானியங்களுக்காகக் காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை. புயல் இழப்பீடு தொகையை அரசு வழங்கும் வரை, கழிப்பறையில்தான் எங்கள் வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். 

கழிவறையில் தங்கியிருப்பதால் வெளியில் நாங்கள் மலம் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இவர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் வீட்டு மானியத் திட்டத்தில் தான் விண்ணப்பித்ததாகவும், ஆனால் அது தனக்கு மறுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஜெனா.

click me!