Prayagraj Mahakumbh 2025 Electric Pole Tracking System : உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில் இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர். வரும் 26ஆம் தேதி வரையில் கும்பமேளா நிகழ்வு நடைபெறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். இந்த நிலையில் தான் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பக்தர்கள் யாரும் தொலைந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
Kumbh Mela: வசந்த பஞ்சமிக்கு பிரயாக்ராஜிலிருந்து சிறப்பு ரயில் சேவை: கும்பமேளா செல்ல ஏற்பாடு!
மௌனி அமாவாசை நாளன்று பல பக்தர்கள் தங்களது குடும்பங்களை தொலைத்த நிலையில் இனிமேல் அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. முதல்கட்டமாக மின்சாரத்துறை 52 ஆயிரம் மின் கம்பங்களில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
புதிய முயற்சி எப்படி பலனளிக்கும்?
மகா கும்பமேளா பகுதியில 52,000க்கும் மேற்பட்ட மின்சாரக் கம்பங்களில் சிறப்புத் தொழில்நுட்பம் பொருத்தப்படுள்ளது. யாரேனும் தொலைந்துவிட்டால் அருகில் இருக்கும் மின்சார கம்பங்களில் இருக்கும் எண்ணையோ அல்லது கியூஆர் QR கோடயோ பயன்படுத்தி நிர்வாகத்திடம் உதவி கேட்கலாம்.
ரூ.10 கோடி கொடுத்து மகா மண்டலேஷ்வர் ஆனாரா? மம்தா குல்கர்னி விளக்கம்!
மின் கம்பத்தில் என்னென்ன இருக்கும்?
GIS மேப்பிங்: ஒவ்வொரு கம்பத்தின் இடமும் டிஜிட்டலாக பதிவு செய்யப்பட்டுருக்கும்.
தனி எண்: ஒவ்வொரு கம்பத்துலேயும் ஒரு தனி எண் இருக்கும். இதைக் கொண்டு சரியான இடத்தைக் கண்டுபிடிக்கலாம்.
QR கோடு: ஸ்மார்ட்போனில் QR கோடை ஸ்கேன் செய்தால் ஒரு ஆன்லைன் படிவம் ஓபன் ஆகும். அதில் உங்களது பிரச்சனையைப் பதிவு பண்ணலாம்.
ரூ.10 கோடி கொடுத்து மகா மண்டலேஷ்வர் ஆனாரா? மம்தா குல்கர்னி விளக்கம்!
இந்த சேவை, மகா கும்பமேளாவில் தொலைந்து போகும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக நிர்வாகத்துக்கும் போலீசுக்கும் உடனடியாக சென்று சேரும். இதையடுத்து அவர்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துறையின் இந்த முயற்சியானது தொலைந்து போறவர்களின் எண்ணிக்கையை குறைக்க மட்டுமல்லாமல், பக்தர்களின் பயணத்தை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.