கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

 
Published : May 25, 2018, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

சுருக்கம்

Kumaraswamy won the trust vote in Karnataka

காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 117 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக தொகுதிகள் வென்றதாக கூறி பா.ஜ.கவை சேர்ந்த எடியூரப்பா ஆட்சி அமைக்க ஆளுநர் கோரியிருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனாலும் பெரும்பான்மை நிரூபிக்கும் முன்பாகவே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். கர்நாடகவில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அந்த சட்டசபையின் இப்போதைய பலம் 222. இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 

இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவைபட்டனர். காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 116 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. 

பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இன்னும் ஹோட்டல் அறையில் இருந்து சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன், புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசிய பின் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பேசினார். எடியூரப்பா பேசி முடித்ததும் பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனை அடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு மொத்தம் 115 பேர் ஆதரவு தெரிவித்தனர். சபாநாயகர் ஒட்டு இதில் கணக்கில் வராது. இதனால் கர்நாடக முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

வெற லெவல் மரியாதை! பிரதமர் மோடிக்கு கார் ஓட்டியாக மாறிய ஜோர்டான் இளவரசர்.. வைரல் வீடியோ!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு