ரூ.240 கோடிக்கு இன்சூரன்ஸ்! 5.1 அடி தொட்டியில் '5.7 அடி ஸ்ரீதேவி! தாவூத்க்கு சொந்தமான ஹோட்டல்! தூசு தட்டும் மரண வழக்கு...

First Published May 25, 2018, 4:32 PM IST
Highlights
Dawood involvement to Rs 240 cr insurance


துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்களும், வதந்திகளும் வெளிவந்துக்கொண்டே உள்ளன. அந்தவகையில் புதிய தகவலாக மும்பையின் நிழல் உலக தாதா என்ற அறியப்படும் தாவூத் இப்ராஹிமிற்கு ஸ்ரீதேவி மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் அது திட்டமிட்ட ஒரு கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் ஆணையர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.

உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது, குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்தார்.அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்டே நடந்த கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் கூறியுள்ளார். தற்போது இந்த மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வேத் பூஷான் விசாரணை நடத்தி வருகிறார்.

தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் வேத் பூஷன், துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த அதே நட்சத்திர ஹோட்டலில் தங்கி அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகளை வேத் பூஷன் மேற்கொண்டுள்ளார்.  ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது என்கிறார் பூஷன்.

ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும் போது தடயமே இல்லாமல் செய்த விட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் காவல்துறை பிரதேச பரிசோதனை அறிக்கை மட்டுமே தந்துள்ளதாகவும், ஸ்ரீதேவியின் ரத்த மாதிரி, நுரையீறலில் தங்கிய நீரின் அளவு போன்ற எந்த தகவல்களையும் அந்நாட்டு போலீஸார் தரவில்லை என வேத் பூஷன் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.  துபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் போலீஸ் அளித்த தடவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம் என்கிறார் வேத்.

இதனிடையே, தயாரிப்பாளர் விகாஸ் சிங், ஓமன் நாட்டில் ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி காப்பீடு இருப்பதாகவும், காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அதனால் பணத்திற்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக விகாஸ் சிங் கூறியுள்ளார்.  அதுமட்டுமல்ல, ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமானது என்றும், அதனால் தாவூதிற்கு இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் வேத் பூஷன் கூறியுள்ளார்.

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழைய விடவில்லை. அதனால் பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது.

எதையோ மறைக்கிறார்கள் என்று வேத் தெரிவித்தார். முன்னதாக ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 5.7 ஆடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார் ஆனால் அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!