காங்கிரஸ்- மஜத கூட்டணி முறிகிறதா...? குமாரசாமி அதிரடி விளக்கம்..!

By vinoth kumarFirst Published Jul 24, 2019, 6:41 PM IST
Highlights

கூட்டணியை தொடர்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தன்னிடம் ஏதும் பேசவில்லை என காபந்து முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 

கூட்டணியை தொடர்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தன்னிடம் ஏதும் பேசவில்லை என காபந்து முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த கர்நாடக  ஆளுநர்  புதிய அரசு அமையும் வரை குமாரசாமி காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.

 

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டம் இன்று பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின் எதிர்காலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி தொடருமா என்று குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் இன்று எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை அழைத்து எதிர்கால நிலைப்பாடுகள் குறித்துப் பேசினோம். எங்களின் கட்சியை வலுப்படுத்துவதே முதல்கட்ட குறிக்கோள், முன்னுரிமை, அதன்மூலம் மக்களிடம் இழந்த நம்பிக்கையைப் பெறுவோம். 

மேலும், காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமையுமா என்பது எனக்குத் தெரியாது. பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இதுகுறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை" என குமாரசாமி விளக்கமளித்துள்ளார். 

click me!