கோரக்பூர் மருத்துமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு… நீதி விசாரணைக்கு உத்தரவு…

First Published Aug 12, 2017, 8:54 AM IST
Highlights
Korakpur hospital ..60 children death


கோரக்பூர் மருத்துமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு… நீதி விசாரணைக்கு உத்தரவு…

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகளின் உண்ணிக்கை கடந்த 5 நாட்களில் மட்டும் 60 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

தொடக்கத்தில் , இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடந்த  5 நாட்களில் 60 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

கோரக்பூர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும் பிஆர்டி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனுக்கான கட்டணத் தொகை 67 லட்சம்  ரூபாய் வழங்கப்படாததால் தனியார் நிறுவனம் ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்திவிட்டதால்  இந்த மரணம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது. 

கோரக்பூர் தொகுதி உத்தரபிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும். இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் யோகி ஆதித்யநாத் பார்வையிட்ட நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

60 குழந்தைககளை பலி கொண்ட இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு சார்பில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான காரணம் என்ற குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது.

 

click me!