1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இனி கட்டாய தேர்ச்சி இல்லை…மத்திய அரசின் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்…

 
Published : Aug 12, 2017, 07:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இனி கட்டாய தேர்ச்சி இல்லை…மத்திய அரசின் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்…

சுருக்கம்

1 std 8th std compulsary pass issue

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயமாக தேர்ச்சி அளிக்கப்பட்டு வரும் நடைமுறையை நிறுத்தும் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் அந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை, மாணவர்கள் தோல்வி அடையாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இந்தமுறை காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் 24 மாநில அரசுகள் சமீபத்தில் கேட்டுக்கொண்டன.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கட்டாய தேர்ச்சி முறையை கைவிட கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு கடந்த 3ந் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த திருத்த மசோதாவை, நேற்று பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தாக்கல் செய்தார்.

இதன்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளின் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மாநில அரசுகள் 'பெயில்' ஆக்கலாம். அதற்கு முன்பு, மறுதேர்வு எழுத அம்மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது

 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!