
கொல்கத்தா மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் கடந்த பெருந்தொற்று காலத்தில் பல திருமணங்கள் நடந்துள்ளது. மேலும் அவை உரிய முறையில் திருமண பதிவு மையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் பதிவு செய்யப்பட்ட அந்த திருமணங்களில் 15 பேருடைய சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாத அளவுக்கு பிழைகள் ஏற்பட்டிருப்பதால் தற்பொழுது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒருமுறை திருமண சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது என்றால், அதை ரத்து செய்யவோ அல்லது பிற வகையில் அதை மாற்றம் செய்யவோ மாவட்ட நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெங்கால் நகரில் உள்ள அரசின் திருமண பதிவு அலுவலகத்தில் கடந்த பெருந்தொற்று காலத்தில் சுமார் 8000 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Independance Day 2023 : யாரும் அங்கீகரிக்காத பெண் விடுதலை போராளிகள் பற்றி தெரியுமா?
அதில் குறைந்தபட்சம் 15 திருமணங்களின் சான்றிதழ்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. குளறுபடி என்று கூறப்படுவது "சான்றிதழில் சாட்சிகளாக வருபவர்களுடைய பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பது, அல்லது தவறான பெயர் இடம்பெற்றிருப்பது, முறையான முகவரி கொடுக்காமல் இருப்பது, அல்லது தற்பொழுது உபயோகத்தில் இல்லாத செல்போன் நம்பரை கொடுத்திருப்பது உள்ளிட்டவை ஆகும்.
இதுகுறித்து திருமண பதிவு மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசும் பொழுது, இது போன்ற தவறுகளை திருத்த முடியாது என்றும், ஆகவே அந்த தம்பதிகள் தங்கள் திருமணத்தை மாவட்ட நீதிமன்றத்தில் சென்று ரத்து செய்துவிட்டு, புதிய சான்றிதழை பெற மறுமணம் (மீண்டும் பதிவு செய்யவேண்டும்) செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த உயர் அதிகாரி கூறும் பொழுது, திருமண தம்பதிகளை யாரோ தவறாக வழி நடத்தி உள்ளார் என்றும், பெருந்தொற்று காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சில இடங்களில் தம்பதிகள் நேரில் வராமலேயே அவர்களுக்கு சான்றிதழ்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படி செய்தவர்கள் அரசு பணியாளர்களா அல்லது வெளியாட்களாக என்பது தெரியவில்லை.