Karnataka Elections 2023: லோக் ஆயுக்தா ரெய்டு... வீட்டு வாசலில் அழுது புரண்டு நாடகமாடிய அதிகாரி!

By SG Balan  |  First Published Apr 24, 2023, 6:56 PM IST

கர்நாடாக மாநிலம் கோலாரில் பஞ்சாயத்து செயல் அலுவலர் என். வெங்கடேசப்பா வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் வீட்டின் முன் தரையில் விழுந்து அழுது புரண்டு நாடகமாடினார்.


கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று  (திங்கட்கிழமை) சோதனை நடத்தினர். பிதார், கோலார், பெல்லாரி, தட்சிண கன்னடா, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலார் தாலுகாவில் பஞ்சாயத்து செயல் அலுவலர் (ஈ.ஓ.) என். வெங்கடேசப்பாவுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பெல்லாரி ராகவேந்திரா காலனி வீடு, ஹோஸ்பேட் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததை வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஆபரேஷன் காவேரி ஆரம்பம்! சூடானில் இருந்து இந்தியா திரும்ப 500 இந்தியர்கள் ரெடி!

லோக்ஆயுக்தா எஸ்பி உமேஷ் தலைமையிலான தனிப்படையினர் வீட்டில் சோதனையிட்டுக் கொண்டிருக்கும்போது வெங்கடேசப்பா வீட்டின் முன் தரையில் விழுந்து புரண்டு அழுதபடி நாடகமாடினார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கர்நாடாக மாநிலம் கோலாரில் பஞ்சாயத்து செயல் அலுவலர் என். வெங்கடேசப்பா வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் வீட்டின் முன் தரையில் விழுந்து அழுது புரண்டு நாடகமாடினார். pic.twitter.com/1vB3qYLkre

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

பிற இடங்களில்...

ஏடிஜிபி கங்காதரையா வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. யெலஹங்கா மற்றும் மகாலட்சுமி லேஅவுட்டில் உள்ள அவரது வீடுகளில் 15 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையிட்டது. இதேபோல பெல்லாரி மற்றும் பெங்களூருவில் உள்ள ஜெஸ்காம் ஏஇஇ உசேன் சாப் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

பிதாரில் உள்ள ஆனந்த்நகர், பசவகல்யாண் நகரில் உள்ள முதுபி ஆகிய இடங்களில் உள்ள துணை தாசில்தார் விஜயகுமார் சுவாமிக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனையிடப்பட்டது. பிதார் குருநகரில் உள்ள செயல் பொறியாளர் சுரேஷ் மேதாவின் வீடு மற்றும் நௌபாத்தில் உள்ள அலுவலகம ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. தாவணகெரேயில் உள்ள டிசிஎஃப் நாகராஜ் மற்றும் தாசில்தார் நாகராஜ் வீடுகளிலும் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

கொச்சி விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி… கேரளா ஆளுநர் வரவேற்க வராதது ஏன்?

click me!