கிரண்பேடி கோரிக்கை நிராகரிப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 4, 2019, 11:34 AM IST
Highlights

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து கிரண்பேடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து கிரண்பேடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களை, சமூக வலைதளங்களில் ஆட்சியாளர்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்து வந்தார். இதற்கு, முதல்வர் நாராயணசாமி நேரடியாகவும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மூலமும் பதிலடி கொடுத்து வந்தார். இதனால் முதல்வர் - துணைநிலை ஆளுநருக்கிடையே மோதல் போக்கு நிலவி வந்தது. 

இதனிடையே, புதுச்சேரி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். அந்த வழக்கில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் புதுச்சேரியின் அன்றாட நிர்வாக விஷயங்களில், ஆளுநர் தலையிடக் கூடாது' என தீர்ப்பளித்தது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் கிரண்பேடியின் கோரிக்கை நிராகரித்து உத்தரவிட்டது. 

click me!