கேரளாவில் கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரம்: பிஷப் பிராங்கோ மூலக்கல் பதவி விலகினார்..!

By thenmozhi gFirst Published Sep 15, 2018, 5:14 PM IST
Highlights

கேரளாவில் கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரம்: பிஷப் பிராங்கோ மூலக்கல் பதவி விலகினார்..!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை 13 முறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அப்போது பாதிரியாராக இருந்தவரும், தற்போது ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிவரும் பிஷப் பிராங்கோ மூலக்கல் இன்று பதவி விலகினார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை 13 முறை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அப்போது தேவாலய நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையுடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீஸிலிலும், வாடிகன் திருச்சபைக்கும் புகார் அளித்தார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து வருகிறார். ஆனால், கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று பிராங்கோ மறுத்து வருகிறார். கடந்த இருவாரங்களுக்கு முன் போலீஸார் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். பிராங்கோவின் தந்தை அந்தோணி, ஜலந்தர் தேவாலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பாதிரியார் பீட்டர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இந்த பாதிரியார் பிராங்கோவால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி 114 பக்க அளவில் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பாதிரியார் பிராங்கோ தனதுபதவியை பயன்படுத்தி கன்னியாஸ்திரியிடம் தவறாக நடந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகார் கொடுத்தும் 2 மாதங்களாக போலீஸார் பிஷப் பிராங்கோவை கைது செய்யவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதாரவா அவருடன் தங்கி இருக்கும் சக கன்னியாஸ்திரிகள், பல்ேவறு கிறிஸ்தவ அமைப்பினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினார்கள். மேலும், பிஷப் பிராங்கோவை கைது செய்யக்கோரியும், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணை முறையாகச் செல்கிறது எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், வரும் 19-ம் தேதி பிஷப் பிராங்கோவை விசாரணைக்கு ஆஜராகும்படி கேரள போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கிடையே தனது பிஷப் பொறுப்பில் இருந்து விலகிய பிராங்காோ அனைத்துப் பொறுப்புகளையும் தனதுஜூனியர் மாத்யு கோக்கண்டத்திடம் ஒப்படைத்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கடந்த 13-ம்தேதி பிஷப் பிராங்கோ வெளியிட்ட அறிவிப்பில், “ எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதையும், அது ஊடகங்களில் வருவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், எனக்கு எதிராக போலீஸாரிடம் வழங்கப்பட்ட ஆதாரங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. என்னிடம் விசாரிக்க போலீஸார் என்னை அழைத்துள்ளார்கள். ஆதலால், நான் கேரள செல்ல இருக்கிறேன். நான் இல்லாத சூழலில் எனது பொறுப்புகளை என்னுடைய ஜுனியர் மாத்யூ கோககண்டனம் கவனிப்பார். அமிர்தசர் மாவட்ட புனித பிரான்சிஸ் தேவாலயத்தின் தலைவராக பாதிரியார் மாத்யூ கோகண்டம் செயல்பட்டு வருகிறார் எனத் தெரிவித்தள்ளார்.

இதற்கிடையே பிஷப் குறித்து தேவாலய வட்டாரங்கள் கூறுகையில், பிஷப் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை, பொறுப்புக்களை மட்டும் வேறு ஒருவருக்கு மாற்றி்க்கொடுத்துள்ளார். அவர் போலீஸ் விசாரணைக்கு செல்கிறார்  எனத் தெரிவித்தனர்.

click me!