ரீல் அல்ல ரியல்... கேரளாவில் நிஜ பாகுபலி... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

By Narendran SFirst Published Sep 15, 2022, 8:25 PM IST
Highlights

கேரளாவில் வாலிபர் ஒருவர் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை சர்வசாதாரணமாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் வாலிபர் ஒருவர் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை சர்வசாதாரணமாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி ஒரு போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் கலந்துக்கொண்ட பிரதீஷ் என்ற வாலிபர் ஒருவர் சுமார் 300 கிலோ எடையுள்ள மரக்கட்டை ஒன்றை தனது தோளில் தூக்கி சென்றார்.

இதையும் படிங்க: கோயில்களுக்கு அருகிலுள்ள மசூதிகள் தாமாகமுன்வந்து அகற்றப்பட வேண்டும்: உ.பி. அமைச்சர் விஷப்பேச்சு

அத்தோடு நிறுத்திக் கொள்ளாத பிரதீஷ், சுமார் 73 மீட்டர் தூரம் வரை அதனை சுமந்த படி நடந்து சென்றுள்ளார். இதனை கண்ட மக்கள் அவரை ஊக்கப்படுத்தினர். மேலும் இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தில் மிகப்பெரிய சிவ லிங்கத்தை நடிகர் பிரபாஸ் தூக்கிக் கொண்டு போவது போல் ஒரு காட்சி இருக்கும். 

இதையும் படிங்க: திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே மணமகன் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

அதனை சினிமாவில் கண்டு வியந்த மக்கள் தற்போது நிஜத்தில் அப்படி ஒரு காட்சியை கண்டு அந்த கேரள வாலிபரை கேரளாவின் பாகுபலி என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், இது போன்ற முயற்சிகள் தீவிர பயிற்சிக்கு பின் எடுத்துக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம் என்றும், மற்றவர்களும் இது போல முயற்சி செய்ய வேண்டாம் என்றும் சில நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 

click me!