Kerala Student Death : கேரளாவை உலுக்கிய பயங்கரம்.. ராகிங் கொடூரத்தால் இறந்த மாணவர் - CBI தீவிர விசாரணை!

By Ansgar R  |  First Published Apr 7, 2024, 6:45 PM IST

Wayanad : கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில், 20 வயதே நிரம்பிய கால்நடை மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பொறுப்பேற்றுள்ளது.


இறந்த மாணவர் சித்தார்த்தன் ஜே.எஸ்., விடுதியின் குளியலறையில் கடந்த பிப்ரவரி 18 அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர், இறந்த தங்கள் மகன், மற்ற மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர், ராகிங் செய்த மாணவர்களில், இந்திய மாணவர்களின் கூட்டமைப்பு (SFI), மாணவர் அமைப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சிபிஐ(எம்) சேர்ந்தவர்களும் உள்ளதாக கூறியுள்ளனர். 

சித்தார்த்தன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவரது மூத்த மாணவர்கள் மற்றும் வகுப்பு தோழர்களால் சுமார் 29 மணிநேரம் "தொடர்ந்து" தாக்கப்பட்டுள்ளார் என்று கேரள காவல்துறை, சிபிஐக்கு அளித்த தரவுகளில் கூறியுள்ளதாக பிரபல நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சித்தார்த்தனை "உடல் மற்றும் மனரீதியாக சித்திரவதை செய்து" மூத்த மாணவர்கள் மற்றும் அவரது சகாக்கள் சித்தார்த்தனை தற்கொலை செய்ய தூண்டியதாக தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

சுற்றுலா சென்ற இடத்தில் உல்லாசம்! கர்ப்பமான 17 வயது பள்ளி மாணவி! சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த டாக்டர் கைது

கடந்த பிப்ரவரி 16ம் தேதி, காலை 9 மணி முதல் பிப்ரவரி 17ம் தேதி மதியம் 2 மணி வரை சித்தார்த்தனை அவர்கள் கைகளாலும், பெல்ட்டாலும் தொடர்ந்து தாக்கி கொடூரமான ராகிங்கை நடத்தினார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் சித்தார்த்தன். இன்ஸ்டிடியூட்டில் படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என எண்ணி அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

பிறகு இதற்கு தற்கொலையை தவிர வேறு வழியில்லை என எண்ணி, பிப்ரவரி 18ம் தேதி மதியம் சுமார் 12.30 முதல் 1.45 மணிக்குள் அவர்கள் ஆண்கள் விடுதியின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை அறிக்கை கூறியதாக பிரபல நாளேடு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

வயநாட்டின் வைத்திரி காவல் நிலையத்தில் 20 பேர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) சிபிஐ வெள்ளிக்கிழமை இரவு, மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் மீண்டும் பதிவு செய்தது. அரசு பரிந்துரைக்கும் வழக்குகளின் நடைமுறை என்னவென்றால், எப்ஐஆரை மீண்டும் பதிவு செய்வதன் மூலம் சிபிஐ விசாரணையைத் தொடங்கும்.

இந்த வழக்கில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, சிபிஐ விசாரணை நடத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த மார்ச் 9ஆம் தேதி உறுதியளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது, மாநில அரசு உத்தரவாதம் அளித்து சில வாரங்களுக்குப் பிறகும் முக்கிய கோப்புகளை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம் சாட்டின.

சிபிஐ விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ய, கோப்புகளை ஒப்படைக்காமல், ஆதாரங்களை அழித்து விடுவதற்கு மாநில அரசு முயற்சிப்பதாகவும் மாணவனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், சிபிஐ விசாரணையை விரைவுபடுத்துமாறு மாணவனின் குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.

வடமாநில தொழிலாளி குத்திக் கொலை: கோவையில் பரபரப்பு!

click me!