செல்வாக்கு மிக்க பணக்காரப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த ஏழை வாலிபர்... கடத்தி கண்டம் கண்டமாக வெட்டிய கோரமான ஆணவக்கொலை!

 
Published : May 29, 2018, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
செல்வாக்கு மிக்க பணக்காரப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த ஏழை வாலிபர்...  கடத்தி கண்டம் கண்டமாக வெட்டிய கோரமான ஆணவக்கொலை!

சுருக்கம்

Kerala shocker Man abducted allegedly murdered by wife kin day

செல்வாக்கு மிக்க பணக்காரப் பெண்ணும், சாதாரண குடும்பத்தை சேர்ந்த பையனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொடூரமாக கொள்ளப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் கெவின்னும், கொல்லம் பகுதியை சேர்ந்த நீனு என்ற பெண்ணும் கோட்டயம் பகுதியில் உள்ள தனியார்  கல்லூரி படிப்பை படிந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போதே இவர்கள் காதலர்களாக உலா வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் கெவின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்த கெவின் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். நீனு தனது வீட்டில் இருந்துள்ளார்.

துபாயில் இருந்து கடந்த ஜனவரி தனது சொந்த ஊருக்கு திரும்பிய கெவின் நீனுவை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். நீனுவின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதனையடுத்து நீனு பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு நீனுவை அவருடைய பெற்றோர்களுடன் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்துள்ளனர். இதன்பின்னர் வீட்டில் தனியாக இருந்த கெவின் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, கெவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். நடுத்தரமான குடும்ப பிண்ணனியை கொண்டவர். கெவின் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் முடித்துவிட்டு வேலைக்காக துபாய் சென்ற கெவின் கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

நீனு கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இவர் வசதிப்படைத்த செல்வாக்குள்ள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். நீனு தாயார் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் நீனு குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம். குறிப்பாக நீனுவின் அண்ணன் ஷானு சாக்கோ கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக கெவினின் உறவினர் ராஜன் பேசுகையில், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும் - நீனுவும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் நீனு குடும்பத்திற்கு தெரிய வர இதுதொடர்பாக காந்திநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

மணமக்கள் இருவரும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நீனு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
கெவின் தனது உறவினரான அனிஷ்  வீட்டில் தங்கினான். நீனு தங்கியிருந்த விடுதி அனிஷின் ஊருக்கு சற்று அருகாமையில் இருந்ததால் அங்கு தங்கியிருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அனிஷின் வீட்டிற்கு வந்து கெவின் மற்றும் அனிஷை கடத்தி சென்றனர். அவர்களின் வீட்டையும் நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். ஆனால் துணை காவல் ஆய்வாளர் அவர்களை அலட்சியப்படுத்தியுள்ளார்கள்.

அப்போது முதலமைச்சர் பினராய் விஜயன் அரசு நிகழ்ச்சிக்காக அம்மாவட்டத்திற்கு வருவதாகவும் அதற்கான பணிகளில் தான் இருப்பதாகவும் துணை காவல் ஆய்வாளர் கூறியதாகவும், காலை 9.30 மணிக்கே காவல்நிலையம் சென்றுள்ளனர். மதியவேளையில் அனிஷை மட்டும் அந்தக் கும்பல் வீட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். காதல் கணவன் கெவின் குறித்து மனைவி அனிஷிடம் கேட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிட்டதாக அவர்கள் சொன்னதாக சொல்கிறார்கள் எனக் கதறியுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கெவினை சடலமாகத் மீட்டுள்ளனர். சடலத்தை கைப்பற்றிய அவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வாலிபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் இப்படி கொடூரமாக கொள்ளப்பட்டுள்ள இந்த விவகாரம் முதலமைச்சர் பிரனாய் விஜயன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடமையை செய்யாத துணை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷானுவை தற்போது போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கொடூரக் கொலை குறித்து கேரள மனித உரிமை ஆணையம் காவல்துறை யிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது. இது ஆணவக்கொலை என சந்தேகிக்கப்படுவதால் காவல்துறை ஏதாவது சமரசம் செய்துள்ளதா? என் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இன்னும் மூன்று வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!