
திருமணமான 20 நாளில் போட்டோ ஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டோ ஷூட்
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே குற்றியாடி, கடியங்காட்டை சேர்ந்தவர் ரெஜின்லால் (28). ரெஜின்லாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த கணிகா என்பவருக்கும் இருவீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 14-ம் தேதி திருமணம் நடந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குற்றியாடி ஆற்றின் கரையோரம் புதுமண தம்பதியரை புகைப்பட கலைஞர்கள் போட்டோ ஷூட் எடுத்தனர்.
ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதிகள்
அப்போது எதிர்பாராத விதமாக மணமக்கள் இருவரும் ஆற்றில் தவறி விழுந்தனர். இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பதால் அவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஆற்றில் குதித்து ரெஜின்லால், கணிகா இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து இருவரையும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாப்பிள்ளை பலி
அங்கு சிகிச்சை பலனின்றி ரெஜின்லால் பரிதாபமாக உயிரிழந்தார். கணிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.