வாஷிங் மிஷினுக்குள் நாகப்பாம்பு! நூலிழையில் உயிர் தப்பிய டெக்னீஷியன்!

By SG Balan  |  First Published Jul 20, 2024, 7:10 PM IST

பழுது பார்க்கும் பணியின்போது மிஷினை ஜனார்த்தனன் இயக்க முயன்றுள்ளார். அப்போதுதான் உள்ளே ஏதோ சுழல்வதைக் கண்டார். அது உயிருள்ள நாகப்பாம்பு என்று தெரிந்தது. இதையடுத்து உடனடியாக வீட்டு உரிமையாளர்களை அழைத்து எச்சரித்தார். அவர்கள் வாஷிங் மிஷினுக்குள் பாம்பு எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.


வாஷிங் மிஷினுக்குள் ​​நாகப்பாம்பு பதுங்கியிருந்த நிலையில் அதைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த டெக்னீஷியன் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பா பகுதியைச் சேர்ந்த டெக்னீஷியன் ஜனார்த்தனன் கடம்பேரி, ஒரு வீட்டில் வாஷிங் மிஷினை பழுது பார்க்கும் பணிக்குச் சென்றுள்ளார். அவர் பழுது பார்க்க முயன்ற வாஷிங் மிஷினுக்குள் ஒரு பெரிய நாகப்பாம்பு இருந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

முதலில், ஜனார்த்தனன் அதை ஒரு ஆடை என்றுதான் நினைத்தார். ஆனால் அதற்கு பதிலாக உயிருள்ள பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வாஷிங் மிஷின் துடுப்புகளில் பாம்பு நன்றாகச் சுருண்டு சுற்றியிருந்தது. அதனால், அது ஒரு ஆடை போல தோற்றமளித்துள்ளது.

பழுது பார்க்கும் பணியின்போது மிஷினை ஜனார்த்தனன் இயக்க முயன்றுள்ளார். அப்போதுதான் உள்ளே ஏதோ சுழல்வதைக் கண்டார். அது உயிருள்ள நாகப்பாம்பு என்று தெரிந்தது. இதையடுத்து உடனடியாக வீட்டு உரிமையாளர்களை அழைத்து எச்சரித்தார். அவர்கள் வாஷிங் மிஷினுக்குள் பாம்பு எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

யார் இந்த கமலா பூஜாரி? நெல் ரகங்களை அழியாமல் காப்பாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்த மூதாட்டி!

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் பிவி பாபு கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களாக மிஷன் வேலை செய்யவில்லை என்கிறார். டாப்-லோடிங் மெஷினை மூடி வைத்துள்ளோம். பாம்பு இயந்திரத்திற்குள் நுழைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மிஷின் சர்வீசுக்காக வந்தவர் அதை நோக்கிக் கையைக் கொண்டுபோனபோது, ​​​​பாம்பு படமெடுத்துவிட்டது என்றும் உடனே பாம்பு என்று தெரிந்து பின்வாங்கிவிட்டார் என்றும் பிவி பாபு தெரிவித்துள்ளார்.

பாம்பு இருப்பதைக் கண்ட உரிமையாளர் உடனே மலபார் வனவிலங்கு விழிப்புணர்வு மற்றும் மீட்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பாம்பை பத்திரமாகப் பிடித்துச் சென்றனர். அந்த நாகப்பாம்புக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வயது இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வாஷிங் மிஷினுக்குள் நாகப்பாம்பு பிடிப்பட்டது இதுவே முதல் முறை என்றும் வடிகால் குழாய் வழியாக பாம்பு உள்ளே நுழைந்திருக்கலாம் என்றும் மீட்புக் குழுவினர் கருதுகின்றனர்.

புதிய அவதாரம் எடுத்த மஹிந்திரா தார்! 5 கதவுகளுடன் வெற லெவல் என்ட்ரி கொடுக்கும் தார் ராக்ஸ்!

click me!