பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு... வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசம்! ஆள் வைத்து கணவரின் முகத்தில் ஆசிட் அடித்த மனைவி!

 
Published : Apr 30, 2018, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு... வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசம்! ஆள் வைத்து கணவரின் முகத்தில் ஆசிட் அடித்த மனைவி!

சுருக்கம்

Kerala man dies after wife attacks him with acid in Malappuram

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் முகத்தில் மனைவியே ஆள்வைத்து ஆசிட் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர். இவரது மனைவி சுபைதா. கடந்த 2 வாரத்துக்கு முன்பு கணவன் - மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், கையில் வைத்திருந்த ஆசிட்டை பஷீரின் முகத்தில் வீசினார்.  இதில் வலி தாங்க முடியாமல் அலறி அடித்து கத்திய பஷீர் முகம் சிறிது நேரத்தில் சிதைந்து கோரமானது.

அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும், மர்ம நபர் தப்பியோடினார். 
இதனையடுத்து மனைவி சுபைதா கணவரை சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பஷீரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது தான் வீட்டில் தூங்கியபோது மர்ம நபர் ஆசிட் வீசிச்சென்றார் என்றும் அவர் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று கூறினார்.  இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பஷீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து பல கட்ட விசாரணை மேற்கொண்டனர். அப்போது பஷீரின் மனைவி சுபைதாவிடக் விசாரணை நடத்தினர் அப்போது சுபைதா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது.  போலீசார் சுபைதாவிடம் மேலும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அதனை கைவிடுமாறு கூறியும் கணவர் கேட்கவில்லை. பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட காரணம் அவரது முக அழகுதான் எனவே அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்த பெண்ணும் தனது கணவரை பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து அவரது முகத்தில் ஆசிட் வீச திட்டமிட்டேன். 

நான் போட்ட திட்டத்தின்படி எனக்கு தெரிந்த நபரை கூலிக்கு வைத்து கணவரின் முகத்தில் ஆசிட் அடிக்க வைத்தேன். என்னுடைய கணவரின் தவறான நடத்தைக்கு பாடம் புகட்டவே அப்படி செய்தேன், அவரை கொலை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல என்றார். கணவருக்கு பாடம் புகட்ட முயன்று அவர் பலியான கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!