கேரளாவை மிதக்க வைத்த பேய் மழை.. முழு வீடும் ஆற்றில் மூழ்கிய ‘ஷாக்’ வீடியோ…

Published : Oct 17, 2021, 09:28 PM IST
கேரளாவை மிதக்க வைத்த பேய் மழை.. முழு வீடும் ஆற்றில் மூழ்கிய ‘ஷாக்’ வீடியோ…

சுருக்கம்

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு முழு வீடும் அப்படியே முழுகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோட்டயம்: கேரளாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு முழு வீடும் அப்படியே முழுகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் தொடர்ந்து பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரள்கிறது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கை முடங்கி போயிருக்கிறது.

இந் நிலையில் கோட்டயத்தில் ஒரு முழு வீடும் அப்படியே கரைபுரண்டோடும் வெள்ளத்தில் பெயர்ந்து ஆற்றில் மூழ்கும் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.

கிட்டத்தட்ட வீடு இருந்தது என்பற்கான சுவடே அங்கு இல்லை. கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் என்ற நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்து அதிர வைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு இயந்திரத்தை கோரி வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!