மிரட்டும் பேய் மழை... இராணுவத்தை உடனே அனுப்பிவையுங்க சார்... கதிகலங்கும் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Aug 9, 2019, 11:58 AM IST
Highlights

கேரளாவில் தொடர்ந்து கன மழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு பணிகளை துரிதப்படுத்த இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பற்றாக்குறை உள்ளதால் மத்திய அரசு உதவியை கேரள முதல்வர் நாடியுள்ளார். 

கேரளாவில் தொடர்ந்து கன மழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு பணிகளை துரிதப்படுத்த இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பற்றாக்குறை உள்ளதால் மத்திய அரசு உதவியை கேரள முதல்வர் நாடியுள்ளார். 

கேரளா முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மின் வினியோகம், போக்குவரத்து சேவை, என அனைத்தும் முற்றிலுமாக முடங்கி உள்ளது  கேரளத்தில் பெய்து வரும் பேய் மழை வரும் 14-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையங்கள் தகவல்களால் கேரள மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது.  வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் வெள்ளத்தால் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக வயநாடு தேயிலை தோட்டங்கள் வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் வயநாட்டு மேம்பட்டி, புதுமனை பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் மயானம் போல் காட்சி அளிக்கின்றன, அதில் தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோவில், மசூதிகள் அனைத்தும் மண்சரிவில் மாயமாக உள்ளன.

இந்நிலச்சரிவில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதிலிருந்து நிலச்சரிவிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கேரள மழைக்கு இதுவரை சுமார் 22 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தேவாலயங்கள், மசூதி, என சுமார் 315-க்கும் மேற்பட்ட  நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கொச்சி விமான நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்லூரிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மாநில அரசு மக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மீட்புபணிகளை துரிதப்படுத்த கூடுதல் இராணுவத்தை அனுப்பி வைக்குமாறு முதல்வர் பினராய் விஜயன் மத்திய உள்துறை அமைச்சகத்திடன் உதவியை நாடியுள்ளார்.  கடந்தாண்டு மழை தந்த சோகத்திலிருந்து மீண்டு வருவதற்குள் மக்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்துள்ளது பேய்மழை.

click me!