கொச்சி விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி… கேரளா ஆளுநர் வரவேற்க வராதது ஏன்?

By Narendran S  |  First Published Apr 24, 2023, 5:24 PM IST

கொச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வராதது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 


கொச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வராதது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரதமருக்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் கொச்சியில் இல்லாததால் கொச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வரமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் இருந்திருந்தால் நான் அங்கு தங்கியிருப்பேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் : அண்ணாமலை திட்டவட்டம்

Tap to resize

Latest Videos

மேலும் கொச்சியில் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் திரும்பி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். கேரள வரும் பிரதமர் மோடி, மாலை மாநிலத்தின் வணிகத் தலைநகரில் உள்ள பிரதான சாலை வழியாக 1.8 கி.மீ தூரம் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.45 மணிக்கு, பல்வேறு தேவாலயங்களின் தலைமைத் தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர், பின்னர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கிறார்.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் வேட்பாளர்களை தொடர்ந்து ஈபிஎஸ் வேட்பாளரும் வாபஸ்!!

செவ்வாயன்று, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க வரும் மோடியை ஆளுநர் கான் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வரவேற்கிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் ஆளுநர் கலந்து கொள்கிறார். மதியம் 12.40 மணிக்கு பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான சூரத் செல்ல உள்ளார்.

click me!