அடித்தது அதிஷ்டம்! கேரளா வெள்ள பாதிப்பின் போது முதுகை படிக்கட்டாக்கிய நபருக்கு கார் பரிசு!

By vinoth kumarFirst Published Sep 10, 2018, 1:38 PM IST
Highlights

கேரளாவில் கடுமையான வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கெட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடுமையான வெள்ள பாதிப்பின் போது தனது முதுகை படிக்கெட்டாக்கி பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் 14 மாவட்டங்களும் வெள்ள நீரால் சூழந்தது. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிட மீட்புக்குழுவினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். 

முக்கியமாக மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. வெள்ளத்தால் சூழப்பட்டு வீட்டில் முடங்கி இருந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவியை நாடினர். அவர்களுக்கு தேசிய ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர் வழங்கினர். மீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார். அவர் மீது ஏறி, அப் பெண் படகில் அமர்ந்து கொண்டார். 

வெங்கரா கிராமத்தில் இம்மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீனவர்களின் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வாலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த மகிந்ரா நிறுவனத்தின் டீலர் சார்பில் இந்த கார் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மாரஸோ காரை வாங்கிய, அதுவும் பரிசாகப் பெற்ற முதல் நபர் ஜெய்ஷால்தான். கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி. ராமச்சந்திரன், கார் சாவியை அவரிடத்தில் வழங்கினார். கார் பரிசு பெற்ற ஜெய்ஷால், எந்த விருதையும் பரிசையும் எதிர்பார்த்து மீட்புப் பணியில் ஈடுபடவில்லை. நான் என் கடமையை மட்டுமே செய்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

click me!