நாட்டையே நிலைகுலைய வைத்த புகைப்படம்... கேரளா சிறுமிக்கு குவியும் வாழ்த்துகள்

By sathish kFirst Published Aug 15, 2018, 2:30 PM IST
Highlights

கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அந்த மாநிலத்தையே உலுக்கி இருக்கிறது

வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு என தொடர்ந்து தாக்குதல் நடத்திய இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் கேரளாவிற்கு பல்வேறு மாநிலங்களும் தங்கள் உதவிக்கரத்தை நீட்டி இருக்கின்றன. இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மீண்டு வருகிறது கேரளம். ஒரு பிரச்சனை என்று வரும் போது தான் மனிதர்களின் உண்மையான ரூபம் தெரியும்.

சென்னையில் வந்த வெள்ளத்தின் போதும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து உதவிய போது தான் தெரிந்தது மனிதம் இன்னும் மாய்ந்துவிடவில்லை என்று . அதே மனிதத்தை கேரளத்தினரும் தற்போது உணர்ந்திருக்கின்றனர். மனிதனோ மிருகமோ ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் பரந்த நோக்கில் ஒவ்வொரு உயிரையும் காத்திட அவர்கள்  எடுத்த முயற்சிகள் பல இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது.

ஒரு காட்டு யானையை காத்திட அணைக்கட்டையே மூட வைத்த கேரள மக்களின் அன்பு ஒரு பக்கம் பிரபலமாகி இருக்கும் தருணத்தில் இன்னொரு சம்பவம் அனைவர் மனதையும் நெகிழச்செய்திருக்கிறது. கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் காட்சிகள் பல இணையத்தில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது. 

அதில் ஒரு சிறுமி கழுத்தளவு நீரில் தன்னுடைய செல்ல நாய்குட்டியை தலையில் சுமந்தபடி செல்லும் காட்சி பார்ப்பவர்களை நெகிழச்செய்திருக்கிறது. அந்த கஷ்டமான சூழலிலும் கூட அந்த பெண் தன் செல்ல பிராணியை காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியை கண்டு வியந்து பாராட்டி இருக்கின்றனர் மக்கள்.

click me!