நாட்டையே உலுக்கிய கதுவா சிறுமி கொலை வழக்கு... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Jun 10, 2019, 1:11 PM IST
Highlights

நாட்டையே உலுக்கிய கதுவா சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நாட்டையே உலுக்கிய கதுவா சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2018-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டார். அப்பகுதியில் கோயில் ஒன்றில் வைத்து 4 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு உடல் சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்தன. 

எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் மற்றும் கோயில் பூசாரி உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஊர்தலைவர் சஞ்சய் ராம் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஊர்தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன், மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள்  உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சிறுவன் என்பதால், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டனை குறித்த விவரங்கள் பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றம் வாங்க உள்ளது.

click me!