தொடரும் அத்துமீறல்...ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்‍கொலை!

Asianet News Tamil  
Published : Jan 10, 2017, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
தொடரும் அத்துமீறல்...ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்‍கொலை!

சுருக்கம்

தொடரும் அத்துமீறல்...ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்‍கொலை!


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்‍கொல்லப்பட்டான். 

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்‍குதல் நடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆக்‍னூரில் நேற்று இந்திய ராணுவத்தின் பொது ரிசர்வ் பொறியாளர் படை முகாம் மீது, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, தீவிரவாதிகளுக்‍கு எதிரான நடவடிக்‍கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

Bandipora மாவட்டம், Parray Mohalla Hajin பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் மீது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாகிக்‍சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்‍க பதிலடி கொடுத்ததால், இருதரப்புக்‍கும் இடையே கடும் துப்பாக்‍கிச் சண்டை நடைபெற்றது. இதில், தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்றீங்களா..? ஒரு பைசா ரீ பண்ட் ஆகாது..! புதிய விதியால் பயணிகள் ஷாக்
சட்டத்தை பின்பற்ற முடியாதா..? நாட்டை விட்டே வெளியேறுங்கள்.. WhatsAppக்கு நீதிமன்றம் எச்சரிக்கை