
அகிலேஷ்தான் மீண்டும் முதலமைச்சர்…முலாயம் சிங் திட்டவட்டம்..முடிவுக்கு வந்ததா பிரச்சனை?
உத்தரபிரதேசத்தில்நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால்அகிலேஷ் யாதவ் தான் அடுத்த முதலமைச்சர் என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடியில் தந்தை முலாயம் சிங், அவருடைய மகனும்முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்ட மோதல் அக்கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்தசண்டை சமீப காலமாக உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது..
இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் அடுத்தமுதலமைச்சர் என்று முலாயம் சிங் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், “சமாஜ்வாடி கட்சி ஒற்றுமையாக தான் உள்ளது என்றும் அச்கட்சியில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் அகிலேஷ் தான் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அகிலேஷ் யாதவும், முலாயம் சிங்கும் இன்று காலை மீண்டும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது உறவைபலப்படுத்து வது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.