ஹிஜாப் விவகாரம்.. அல்கொய்தா தலைவர் வீடியோ வெளியீடு.. மாணவியை பாராட்டிய கையோடு என்ன சொல்கிறார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Apr 6, 2022, 10:40 AM IST
Highlights

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்ட மாணவர்கள் கூட்டத்தை எதிர்கொண்டு, "அல்லாஹு அக்பர்" என்று பதில் கோஷம் எழுப்பிய ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி முஸ்கன் கானின் தைரியத்தை பாராட்டி இருந்தனர். 

ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஹிஜாப் விவகாரம்

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

மாணவி முஸ்கன் கான்

பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்ட மாணவர்கள் கூட்டத்தை எதிர்கொண்டு, "அல்லாஹு அக்பர்" என்று பதில் கோஷம் எழுப்பிய ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி முஸ்கன் கானின் தைரியத்தை பாராட்டி இருந்தனர். இந்நிலையில், அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி மாணவி முஸ்கன் கானை பாராட்டியுள்ளார். 

அல்கொய்தா தீவிரவாத தலைவர்

இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வெளியிட்டுள்ள வீடியோவில்;- ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அல்லா ஹு அக்பர் என கோஷமிட்ட மாணவி முஸ்கானையும் அவர் பாராட்டினார். இந்தியாவின் உன்னத பெண்' என எழுதப்பட்ட ஒரு போஸ்டருடன் அவர் கவிதை நடையில் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த பெண் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இதை பார்த்து தான் அவரது துணிவு குறித்து அறிந்து உருகினேன் என தெரிவித்துள்ளார்.

click me!