மீண்டும் வெடிக்கும் மேகதாது பிரச்சனை.. விடாது துரத்தும் கர்நாடகா.. டெல்லி சென்று லாக் போட்ட சி.எம்..

Published : Apr 06, 2022, 09:41 AM IST
மீண்டும் வெடிக்கும் மேகதாது பிரச்சனை.. விடாது துரத்தும் கர்நாடகா.. டெல்லி சென்று லாக் போட்ட சி.எம்..

சுருக்கம்

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.  

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய அணை கட்டுவதற்கான திட்டவரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேகதாது அணை விவகாரம்:

சமீபத்தில் நடந்த கர்நாடக அரசு பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டுவதற்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்க கோரி மீண்டும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே கர்நாடக அரசின் செயலுக்கு தமிழகம் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனிடயே தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில்  மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தீர்மானம் நிறைவேற்றம்:

தீர்மானத்தின் மீது உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன்,காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநில அனுமதியையும், மத்திய அரசு அனுமதியையும் பெறாமல் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.எனவே இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அனுமதியையும் தரக்கூடாது என மத்திய அரசை கேட்டு கொள்வதாக வலியுறுத்தினார்.

தண்ணீருக்காக ஒரு பக்கம் கேரளாவுடனும், மறுபக்கம் கர்நாடகாவுடன் கையேந்தும் நிலையில் உள்ளது.நம்முடைய மகன், பேரன் வரை காவிரி போராட்டம் முடியாதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால தலைமுறையினர் நம்மை சபிக்கும் என்று பேசினார்.

கர்நாடக முதலமைச்சர் டெல்லி பயணம்:

இந்நிலையில் டெல்லியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், கர்நாடக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மேகேதாட்டு திட்டத்தால் பெங்களூருவில் குடிநீர் மற்றும் மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் இந்த திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். மேலும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலித்து உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பொம்மை தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!