காங்கிரஸ் கட்சி 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவிட 4.86 சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்று 135 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் பாஜகவைவிட அதிக அளவு வாக்குகளைப் பெற்று முன்னேறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி 42.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவிட 4.86 சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி அடைந்து அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தயாராகிவரும் நிலையில், 66 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி இருக்கும் பாஜக 36 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளை இழந்து 36.22 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தது.
தோல்வி தோல்விதான்! கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை
2018ஆம் ஆண்டு 38.04 சதவீதம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 57 தொகுதிகளை அதிகமாக வென்றிருக்கிறது. அதே சமயத்தில் சிங் மேக்கர் ஆகும் கனவுடன் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த ஹெச்.டி. குமாரசாமியின் ஜேடி(எஸ்) பெற்ற வாக்குகள் முந்தைய தேர்தலில் பெற்ற 18.36 சதவீதத்தில் இருந்து 13.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
0.69 சதவீதம் வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவெடுத்து நோட்டா பட்டனை அழுத்தியுள்ளனர். 2018ஆம் ஆண்டில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் 0.86 சதவீதமாக இருந்தது.224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 73.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஒரே கட்டமாக நடந்த இந்த கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி (சனிக்கிழமை) எண்ணப்பட்டன.
தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து பசவராஜ் பொம்மை சனிக்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பொம்மை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?