கோடிகளில் புரளும் பாஜகவினர்..2019ல் ஆட்சியை கவிழ்த்த MLAக்கள் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு.!!

Published : Apr 22, 2023, 03:57 PM ISTUpdated : Apr 22, 2023, 04:02 PM IST
கோடிகளில் புரளும் பாஜகவினர்..2019ல் ஆட்சியை கவிழ்த்த MLAக்கள் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு.!!

சுருக்கம்

பலர் பாஜக அமைச்சரவையில் நல்ல பதவிகளை அனுபவித்ததால் அவர்களின் சொத்துக்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

2019ல் அப்போதைய முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க, காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ்-ல் இருந்து பாஜகவுக்கு தாவினர். அவர்கள் மீண்டும் பாஜக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள் பலர். அவர்களில் பலர் பாஜக அமைச்சரவையில் நல்ல பதவிகளை அனுபவித்ததால் அவர்களின் சொத்துக்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

TNIE இல் கிடைக்கும் தரவுகளின்படி, பெரும்பாலானவர்களின் அசையும் சொத்துக்கள் உயர்ந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், பலர் தங்கள் மனைவியின் பெயரில் தங்கள் சொத்துக்களை பட்டியலிட்டுள்ளனர். உதாரணமாக, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர், 2018-ல் போட்டியிட்டபோது ரூ.1.11 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2023-ல் ரூ.2.79 கோடி. 

அதேபோல், ரூ.52,81,000 ஆக இருந்த அவரது அசையாச் சொத்து இப்போது ரூ.1,66,60,480 ஆக உள்ளது. சுதாகரின் மனைவிக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் 2018 இல் ரூ.1,17,63,871 ஆகவும், ஐந்தே ஆண்டுகளில் ரூ.16,10,04,961 ஆகவும் உயர்ந்துள்ளது. 2018-ல் ரூ.18,93,217 ஆக இருந்த மகேஷ் குமடஹள்ளியின் அசையும் சொத்து ரூ.1,33,32,819 ஆகவும், 2018-ல் ரூ.67.83 லட்சமாக இருந்த கூட்டுறவு அமைச்சர் எஸ்.டி.சோமசேகரின் அசையும் சொத்து 2023-ல் ரூ.5.46 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

இவர்களில் பலர், தங்கள் மனைவியின் சொத்து விவரங்களை இதுவரை அறிவிக்காமல், சமீபத்தில் சட்டசபை தேர்தலுக்காக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான பி.ஏ.பசவராஜு, தனது மனைவிக்கு ரூ.56.57 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.21.57 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக அறிவித்தார்.

2018ல் ரூ.3.12 கோடிக்கு அசையா சொத்து வைத்திருந்த விவசாய அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு, தற்போது 2023ல் ரூ.19.60 கோடி மதிப்புள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. இதையெல்லாம் பார்க்கும் மக்களோ அரசியல் என்பது மக்களின் வளர்ச்சிக்கு அல்ல, அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு என்று கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க..எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!

இதையும் படிங்க..கருணாநிதி வழி நடக்கும் ஆட்சியில் இப்படியா.? பாஜகவின் நீட்சி.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக்கட்சி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!