என்னை மதிக்கவில்லை... அரசை டிஸ்மிஸ் பண்ணுங்க... உள்துறை அமைச்சகத்திற்கு அதிரடி அறிக்கை அனுப்பிய ஆளுநர்..!

By vinoth kumarFirst Published Jul 21, 2019, 12:12 PM IST
Highlights

கர்நாடக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, ஆளுநர் வஜுபாய் வாலா 2 முறை உத்தரவு பிறப்பித்தும், முதல்வர் குமாரசாமி அதை மதிக்கவில்லை.இதனால், அரசியல் சாசனம் மீறப்பட்டு, அரசை, 'டிஸ்மிஸ்' செய்யும் வகையில், மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

கர்நாடக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, ஆளுநர் வஜுபாய் வாலா 2 முறை உத்தரவு பிறப்பித்தும், முதல்வர் குமாரசாமி அதை மதிக்கவில்லை. இதனால், அரசியல் சாசனம் மீறப்பட்டு, அரசை, 'டிஸ்மிஸ்' செய்யும் வகையில், மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், முதல்வர் குமாரசாமி அரசு பெருபான்மையை இழந்ததால் முதல்வர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என எடியூரப்பா தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதேபோல், ஆளுநர் 2 முறை உத்தரவிட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் ரமேஷ்குமார் நிராகரித்தார். 

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக மாநில அரசியலில் நிலவும் பரபரப்பான நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கையை ஆளுநர் வஜுபாய் வாலா மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அதில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் தவிர்த்து வருவது தொடர்பாக பாஜக சார்பில் தன்னிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜூலை 19-ம் தேதி பகல் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தக்கோரி முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியது, அதை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால் மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2-வது நினைவூட்டல் கடிதம் முதல்வருக்கு எழுதியது. 

ஆனால், தனது கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியப்படுத்தியது மட்டுமில்லாமல், தனது (ஆளுநர்) அதிகாரம் தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுப்பிய கேள்விகள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் தனது அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை 2 நாள் விடுமுறைக்கு பிறகு நாளை மீண்டும் கூடுகிறது. அப்போது, முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் கொறடா உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் முதல்வர் குமாரசாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!