கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயனுக்கு அழைப்பு இல்லை - ஏன்?

By Raghupati R  |  First Published May 19, 2023, 11:09 AM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார், மு.க ஸ்டாலின்,மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் ஆகியோர் பெங்களூருவில் நாளை (மே 20) நடைபெறும் விழாவில் பதவி ஏற்கின்றனர். சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரின் பதவியேற்பு விழா, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 2024 தேர்தலுக்கான அட்சரமாக இது அமைகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் மற்றும் நவீன் பட்நாயக் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

கர்நாடக முதல்வரின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் :

1.சோனியா காந்தி

2.ராகுல் காந்தி

3.பிரியங்கா காந்தி வத்ரா

4.சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

5.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

6.இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு

7.ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

8.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

9.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

10.சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

11.என்சிபி தலைவர் சரத் பவார்

12.மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே

13.பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

14.தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா

15.பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

16. கேரளா காங்கிரஸ்

17. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

18. கேரளா புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சித்தராமையா வியாழன் அன்று தொலைபேசியில் ஸ்டாலினை அழைத்து விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக அதிகாரப்பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.சி.வேணுகோபால் கூறுகையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஒரே எண்ணம் கொண்ட கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த பட்டியலில் பாஜக அல்லாத பிற தலைவர்களை காங்கிரஸ் கட்சி அழைத்துள்ளது.

ஆனால், இந்த பட்டியலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் பெயரும் இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டும் விழாக்களில் கலந்து கொள்ளும் இவர்கள், காங்கிரஸ் கட்சியின் இந்த பட்டியலில் ஏன் இடம்பெறவில்லை என்ற சர்ச்சையும் எழுந்து உள்ளது. இவர்கள் காங்கிரஸ் கட்சியை அந்தந்த மாநிலங்களில் கடுமையாக எதிர்ப்பவர்கள் ஆவார்கள்.
 

அதே சமயத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாதவர்கள். எனவேதான் அவர்களுக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என்று குரல் எழுந்துள்ள நிலையில், இது மூன்றாம் அணிக்கு வித்திடுமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அழைக்கப்படாத கட்சிகள்:

ஆம் ஆத்மி கட்சி (டெல்லி மற்றும் பஞ்சாப்)
பகுஜன் சமாஜ் கட்சி (உத்தரப்பிரதேசம்)
பிஜு ஜனதா தளம் (ஒடிசா)
பாரத ராஷ்டிர சமிதி (தெலுங்கானா)
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (தெலுங்கானா)
யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் (ஆந்திரப் பிரதேசம்)
தெலுங்கு தேசம் கட்சி (ஆந்திரப் பிரதேசம்)
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (அசாம்) 
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) (கர்நாடகா)

இதையும் படிங்க..பிளான் போட்ட பிரதமர் மோடி.. முந்திய ராகுல் காந்தி! அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய தலைவர்கள் - ஏன் தெரியுமா?

click me!