சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா அறிவிப்பு

Published : Feb 19, 2025, 05:44 PM ISTUpdated : Feb 19, 2025, 05:52 PM IST
சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா அறிவிப்பு

சுருக்கம்

நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என லோக் ஆயுக்தா போலீசார் புதன்கிழமை கூறியுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் பிறருக்கு எதிரான MUDA நில மோசடி வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று லோக் ஆயுக்தா போலீசார் புதன்கிழமை கூறியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் இறுதி அறிக்கையை ஆய்வுக்காகச் சமர்ப்பித்த ஒரு வாரத்திற்குப் பிறகு லோக் ஆயுக்தா போலீசாரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளிவருகிறது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட நில ஒதுக்கீடு வழக்கில் 138 நாள் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து செப்டம்பர் 2024 இல் லோக் ஆயுக்தா விசாரணை தொடங்கப்பட்டது. மைசூர் லோக் ஆயுக்தா காவல் கண்காணிப்பாளர் டி.ஜே. உதேஷ் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்கினார்.

காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி! ஒரு கிலோ காபி தூள் 1000 ரூபாய்க்கு மேல் உயர்கிறது!

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், சித்தராமையா, அவரது மனைவி பி.எம். பார்வதி மற்றும் மைத்துனர் பி.எம். மல்லிகார்ஜுன சுவாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். அவர்களின் வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இறுதி அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டன. வழக்கு தொடர்பான 3,000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஒப்புதல் அளித்ததார். அதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் ஸ்னேகமாயி கிருஷ்ணா என்பவரின் மனுவின் அடிப்படையில், சித்தராமையா உள்பட மூன்று பேர் மீது FIR பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஆளுநரின் முடிவை உறுதி செய்தது.

அவசரமாக ரூ.40 லட்சம் கடன் தேவையா? உதவுத் தயாராக இருக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி!

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!