இடையூறு இல்லாமல் எடியூரப்பா வெற்றி... நம்பிக்கை தந்த நம்பிக்கை வாக்கெடுப்பு..!

Published : Jul 29, 2019, 12:10 PM IST
இடையூறு இல்லாமல் எடியூரப்பா வெற்றி... நம்பிக்கை தந்த நம்பிக்கை வாக்கெடுப்பு..!

சுருக்கம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். அவர் தனது அரசு மீதான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் இன்று நிரூபிக்க உள்ளார். இதுதொடர்பாக பெங்களுருவில் உள்ள சான்செரி நட்சத்திர விடுதியில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்றார். 

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. தொடக்கத்தில் பேரவையில் எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா உரையாற்றினார். பின்னர் தொடங்கிய நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். இதில் தேவையான பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதால் முதல்வர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு ஏர்போர்ட் போனா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…படம், மேட்ச் எல்லாம் ஒரே இடத்தில்
ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்