
கர்நாடகாவில் அணைகள் கட்டலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், அணை கட்டுதல், நீர் திறப்பு உள்ளிட்டவைகளை மேற்பார்வைக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு புதிய அணை கட்ட முடிவு செய்தது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கர்நாடக விவசாய துறை அமைச்சர், மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என்று கூறியிருந்தார்.
மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதால், இரு மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் கர்நாடகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார்.
காவிரி பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கர்நாடக அரசு, அணைகள் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேற்பார்வை குழு அமைத்து, பராமரிப்பு பணிகளில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.