இன்னும் மூன்றே நாள்... அரசியலை புரட்டிப்போடும் அதிரடி திருப்பம்... 18ம் தேதி இருக்கு கச்சேரி..!

Published : Jul 15, 2019, 02:50 PM IST
இன்னும் மூன்றே  நாள்... அரசியலை புரட்டிப்போடும் அதிரடி திருப்பம்... 18ம் தேதி இருக்கு கச்சேரி..!

சுருக்கம்

சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது.  

கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கர்நாடக அரசியலில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது.

ஆகையால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  
 

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!