சசிகலாவின் ஃபார்முலாவை காப்பியடித்த பாஜக... கர்நாடக அரசியலில் பரபரப்பு..!

Published : Jul 15, 2019, 12:48 PM ISTUpdated : Jul 15, 2019, 12:49 PM IST
சசிகலாவின் ஃபார்முலாவை காப்பியடித்த பாஜக... கர்நாடக அரசியலில் பரபரப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் கூவாத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதை போல காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை பாஜக மும்பையில் உள்ள ஒரு ரிசார்டில் தங்க வைத்துள்ளது.

தமிழகத்தில் கூவாத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதை போல காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை பாஜக மும்பையில் உள்ள ஒரு ரிசார்டில் தங்க வைத்துள்ளது.

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசிலிருந்து இதுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை மாநில சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், ராஜினாமா குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பையிலிருந்த சொகுசு ரிசார்ட்டில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கியிருந்தனர். இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்படும் நிலையில், அவர்கள் கர்நாடக திரும்ப உள்ளதாகன் கூறப்படுகிறது.  

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும். எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கும். காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெற்றுள்ளார். 

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!