கர்மா விளையாட்டு... கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பாஜகவுக்குள் எதிர்ப்பு..?

By Thiraviaraj RMFirst Published Jul 24, 2019, 11:30 AM IST
Highlights

நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. 
 

நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. 

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனால், முதல்வர் பதவியை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் குமாரசாமி.

சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவித்த பின், பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா சட்டப்பேரவையில் வெற்றி குறியீட்டை காண்பித்து, தனது ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கர்நாடக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் ’கர்மாவின் விளையாட்டு’ என்று கிண்டலாக பதிவி ஒன்றை வெளியிட்டது. 

இதனிடையே எடியூரப்பா முதல்வராக பாஜகவுக்குள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது சுரங்க ஊழல் உள்ளதால் அவருக்கு பதிலாக வேறொருவர் முதல்வராக அறிவிக்கப்படலாம் என கர்நாடக செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டன. ஆனாலும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது தொடர்பாக கூறுகையில், எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதே பெரும்பாலான கர்நாடகா பாஜக தலைவர்களின் விருப்பம். இருப்பினும் கட்சியின் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்றார். எடியூரப்பா தலைமையில் இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் கட்சியின் மூத்தத் தலைவர்கள், அமித் ஷாவுடன் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

click me!