
1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது. இந்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ளது மலப்புழா. கேரளாவின் அழகான பெண்களைப்போல பச்சை பசேல் என்ற தென்னமரங்கள், பாக்குமரங்கள், தோப்புகள் சூழந்த பகுதி மலப்புழா என்ற சின்னஞ்சிறய நகரம். அந்நகரத்தில் உள்ளது கம்பீரமான மழப்புழா அணை.
கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக 22 அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. சமீபமாக இடுக்கி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் சிறுதொணி நதியில் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வருவதால் மலப்புழா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது, இன்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரள மக்களை காத்து நிற்கிறது மலப்புழா அணை.
தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும் மலம்புழா அணை. இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். கேளராவின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணை கட்டுமானப்பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் அதாவது 1955ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா காணப்பட்டது. இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர். 2 கால்வாய்களை கொண்டது. இதன் மூலம் 42 ஆயிரம் ஹெக்டர் நீர் தேக்க பரப்பளவு கொண்டது.
அணையின் நீர் பிடிப்பு பகுதி 145 சதுர கிலோ மீட்டர், கொள்ளளவு 236 கன மீட்டர். 1955ல் மெட்ராஸ் ஸ்டேட் முதல்வராக இருந்த பேரறிஞர் காமராஜர் இந்த அணையை திறந்துவைத்துள்ளார். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம் காலத்தில் அவரின் மேற்பார்வையில் இந்த அணை கட்டப்பட்டது. ரூ 5 கோடியில் மலம்புழா அணை கட்டப்பட்டு 46,000 ஏக்கர் பாசன வசதி பெறும் அளவிற்கு மாற்றப்பட்டது. கம்பீரமாக உள்ள இந்த அணையின் கீழ் பகுதி முழுவதும் பெரிய தோட்டம், குழந்தைகளுக்கான விளையாட்டு புல்வெளி மைதானம். நீச்சல் குளம், போட்டிங், ரோப் கார் என சகல வசதிகளையும் செய்து வைத்துள்ளது கேரளா சுற்றுலாத்துறை.
1955ல் பாலக்காடு தமிழகத்தோடு இருந்தபோது அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் கட்டிய மலப்புழா அணை, இன்றும் வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தில் இருந்து கேரள பாலக்காடு மக்களை பாதுகாத்து கம்பிரமாக நிற்கிறது.