80,000 கோடியில் உலகின் மிகப்பெரிய காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம்... திறந்து வைத்து அசத்தும் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jun 22, 2019, 12:05 PM IST
Highlights

தெலுங்கானாவில் 80 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட காலேஸ்வரம் பிரம்மாண்ட நீர்ப்பாசனத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்.

தெலுங்கானாவில் 80 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட காலேஸ்வரம் பிரம்மாண்ட நீர்ப்பாசனத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்தார்.

 

மகாராஷ்டிராவில் உருவாகும் கோதாவரி நதி தெலுங்கானா மாநிலத்தின் வழியாக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று கடலில் களக்கிறது. விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்காக கோதாவரி நதியின் மெடிகட்டா பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது சந்திரசேகர் ராவ் அரசின் கனவு திட்டம் ஆகும்.

 

காலேஷ்வரம் திட்டம் தெலுங்கானாவின் 13 மாவட்டங்களில் உள்ள 45 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம் செய்ய உதவும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ஐதராபாத், செஹந்திரபாத் உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவைக்கு இந்தத் திட்டம் பயன்படுத்தப்படுவதுடன் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். 

click me!