ஓடும் பேருந்தில் பெண்ணின் ஆடையில் கை வைத்த ஓட்டுநர்... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்...!

Published : Jun 22, 2019, 11:31 AM ISTUpdated : Jun 22, 2019, 11:33 AM IST
ஓடும் பேருந்தில் பெண்ணின் ஆடையில் கை வைத்த ஓட்டுநர்... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்...!

சுருக்கம்

ஒடும் பேருந்தில் உறக்கத்தில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சக பயணிகள் ஓட்டுநரை நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

ஒடும் பேருந்தில் உறக்கத்தில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சக பயணிகள் ஓட்டுநரை நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

கேரளாவில் புகழ்பெற்ற கல்லடா டிராவல்ஸ் பேருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் இருந்து பெங்களூருவில் நடைபெறும் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொண்டார். படுக்கை வசதி கொண்ட ஏசி இருந்தில் இரவு பயணம் என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். எப்போது தொலைதூர பயணம் என்பதால் இரண்டு டிரைவர்கள் இருப்பார்கள்.

 

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் கொல்லம் இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் உடலை ஒருவர் சீண்டுவது போல உணர்ந்துள்ளார். முதலில் தெரியாமல் பட்டிருக்கும் என்று அந்த பெண் நினைத்துள்ளார். பிறகு அந்த நபர் பெண்ணின் ஆடைக்குள் கைகளை விட்டு சில்மிஷல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக எழுந்து அலறியுள்ளார். இதனையடுத்து, சக பயணிகள் எழுந்து பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லடா டிராவல்ஸ் ஓட்டுநர் ஜான்சனை சரமாரியாக தாக்கினர். 

இதுதொடர்பாக பெண் காவல் நிலையத்தில் கல்லடா டிராவல்ஸ் ஓட்டுநர் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கல்லடா டிராவல்ஸ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டனர். அதன் பிறகு கோட்டயத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஜான்சனை போலீசார் கைது செய்தனர். இவர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!