
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 75 ஐ,.எஸ்.ஆதரவு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல், மும்பை வெடிகுண்டு தாக்குதல், மற்றும் பதான்கோட் தாக்குதலை அடுத்து இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு எல்லைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.இணையம் வழியாக தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவ்வப்போது ஆதரவு தீவிரவாதிகளை கைது செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை 75 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 21 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.