
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இன்று 36-வது பிறந்தநாள்.
தோனிக்கு இன்றுடன் 35 வயது நிறைவடைகிறது. 1981-ம் ஆண்டு ஜூலை 7ந்ேததி தோனி பிறந்தார். பிறந்த நாள் காணும் தோனிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, வி.ஐ.பிக்கள் என பலதரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும், நம் தமிழக இளம் சிங்கங்களும், தோனியின் பிறந்தநாளை சற்று வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
கபாலி படத்தின் நெருப்புடா பாடல் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது, அதை டாக்கிரியேட் செய்து, தோனியின் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ளனர். இது இப்போது வைரலாகப் பரவி வருகிறது.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, இதுவரை, 2007 டி20 உலகக் கோப்பை, 2008 விபி முத்தரப்பு தொடர், 2011 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையைக் கைப்பற்றியது என்று பல முத்திரைகளைப் பதித்துள்ளார். 2015 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வந்துள்ளார். தற்போது மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20தொடரில் தோனி விளையாடி வருகிறார்.
சிறு வயதில் இருந்தே தோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்தும், பாட்மிண்டனும்தான்.
ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள். அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம்.
இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவாராம்.
இளம் வயதில் பீகார் அணியில் ஆடிய தோனி அதன்பின் இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார். அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது தோனிக்கு திருப்புமுனை.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆகி, ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.
எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார் கங்குலி. பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148அடித்து கவனம் பெற்றார்.
இலங்கையுடன் ஆன போட்டியில் சேஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆனார்.
டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டன்ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்.
தோனிக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்; சச்சின் மற்றும் கில்க்றிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள்.
வீடியோ கேம் வெறியர், புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .
ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வளவு சிக்கலான நிலையிலும் தோனி ரொம்ப “கூலாக” டீல் செய்வார்.
தற்போது தனது கேப்டன் பொறுப்புகள் மீது தேவையில்லாத விமர்சனங்கள் வந்ததையடுத்து, அந்த பொறுப்பை விராத் கோலியிடம் கொடுத்து சகவீரராக தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்து வருகிறார் தோனி.
தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்திய எல்லைப்படைப் பிரிவு தோனிக்கு, லெப்டினன்ட் பதவி வழங்கி கவுரவித்தது.
இதுவரை 296 ஒருநாள் போட்டிகளில் விளையாடி தோனி, 9,496 ரன்கள் சேர்த்துள்ளார்.அதில் 10 சதங்கள், 64அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக இருந்த தோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்றார்.