பிரதமர் மோடி கையால் விருது வாங்க மறுத்த பத்திரிகையாளர் ? யார் அவர் ?

 
Published : Nov 05, 2016, 06:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
பிரதமர் மோடி கையால் விருது வாங்க மறுத்த பத்திரிகையாளர் ? யார் அவர் ?

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் கையால் விருது வாங்க பிரபல ஆங்கில நாளேட்டின் பத்திரிகையாளர் மறுத்துவிட்டது பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது. 

" டைம்ஸ் ஆப் இந்தியா " நாளேட்டின் பத்திரிகையாளர் அக் ஷயா முகுல் என்பவர்தான் பிரதமர் மோடியிடமிருந்து விருது வாங்க மறுத்தவர். 

பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் ராம்நாத் கோயங்கா விருது  வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடந்தது. 
 

இந்த முறை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் பணிபுரியும் அக் ஷயா முகுல் என்பவர் எழுதிய "கீதா பிரஸ்" மற்றும் "மேக்கிங் ஆப் இந்து இன் இந்தியா " என்ற புத்தகம் விருதுக்கு தேர்வாகி இருந்தது. இந்த விருதைப்பெற பத்திரிகையாளர் அக்்ஷய்முகல் அழைக்கப்பட்டு இருந்தார்.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் மோடி அனைவருக்கும் விருது வழங்கினார். 
 

ஆனால், இந்த விழாவுக்கு பத்திரிகையாளர் முகல் வரவில்லை. மாறாக தான் பிரதமர் மோடியின் கையால் விருது வாங்க விரும்பவில்லை எனக்கூறி டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். 
 

டுவிட்டரில் பத்திரிகையாளர் முகுல் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது, " நான் இந்த விருதை பெறுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால், பிரதமர் மோடி கையால் இந்த விருதைப் பெறுவதில் எனக்கு பிரச்சினைகள் உள்ளன. 

பிரதமர் மோடியின் கருத்துக்களோடு, என்னோடு கருத்துக்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாது. அப்படியிருக்கும் சூழலில்,  அவருடன் சிரித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விருந்து வாங்க விரும்பவில்லை.  கடந்த பிப்ரவரி மாதம் பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் மாணவர்களையும, பத்திரிகையாளர்களையும, பாரதிய ஜனதாவின் ஓ.பி. சர்மாவும், வழக்குரைஞர்களும் தாக்கி, அடக்குமுறையை கையாண்டனர் " என்று தனது கருத்தில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, பத்திரிகையாளர் முகல் சார்பாக அவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் கிருண்ணன் சோப்ரா பெற்றுக்கொண்டார். 
 

பத்திரிகையாளர் முகலை இந்த விழாவை பங்கேற்கச் செய்ய விழா நடத்தும தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் அவர் மறுத்துவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!