"NDTVக்கு தடை விதிக்கப்பட்டது எமர்ஜென்சியை நினைவுபடுத்துவது போல் உள்ளது" : பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்..!!

 
Published : Nov 05, 2016, 05:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
"NDTVக்கு தடை விதிக்கப்பட்டது எமர்ஜென்சியை நினைவுபடுத்துவது போல் உள்ளது" : பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்..!!

சுருக்கம்

NDTV சேனல் ஒளிபரப்பை ஒருநாள்தடை செய்த மத்திய அரசின் உத்தரவு அவசரநிலையை நினைவுப்படுத்துவதுபோல் உள்ளது என எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பதான்கோட் தாக்குதலின்போது, பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கியத் தகவல்களை நேரடியாக ஒளிபரப்பு செய்த என்.டி.டி.வி. இந்தியா இந்தி சேனல் ஒளிபரப்பை வரும் 9-ந் தேதி ஒருநாள் மட்டும் தடை செய்ய மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால்ம, த்திய அரசின் இந்த உத்தரவைக் கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைவதாகவும், மற்ற தொலைக்காட்சி சேனல்கள் போலத்தான் தாங்களும் ஒளிபரப்பு செய்ததாக என்.டி.டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஒளிபரப்பு

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலின்போது, பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகளை டி.வி செய்தி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புசெய்தன. இந்த காட்சிகளை பார்த்து, தீவிரவாதிகளுக்கு அவர்களை இயக்கியவர்கள் தகுந்த உத்தரகளை பிறப்பித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்துதீவிரவாத தாக்குதல் சம்பவங்களின்போது, நேரடி ஒளிபரப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

தீவிரவாத தாக்குதலின்போது, பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய தகவல்களை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது, என அனைத்து செய்தி சேனல்களுக்கும் தகவல்ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுரைகள் வழங்கியது. 

பதான்கோட்
இந்நிலையில், கடந்த  ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் கடந்த  தாக்குதல் நடத்தினர். அப்போது, அங்குள்ள போர்விமானங்கள், வெடிமருந்துகள் இருக்கும் இடம், தீவிரவாதிகள் பதுங்கிய இடத்தில் இருந்து வீரர்களின் குடியிருப்புகள், வீரர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி உள்ளதொலைவு  போன்ற தகவல்களை என்டிடிவி இந்தியா என்ற இந்தி சேனல் ஒளிபரப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் குழு

இந்த விஷயம் குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழு விவாதித்தது. செய்தி சேனல் வெளியிட்ட தகவல், பெரிய அளவிலான பாதிப்பைஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த செய்தி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு விளக்கம்அளித்த செய்தி நிறுவனம், வெப்சைட் மற்றும் ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தகவல்களைதான் ஒளிபரப்புச் செய்தோம் என பதில் அளித்தது. 

ஒருநாள் தடைக்கு பரிந்துரை

இந்த பதிலில் திருப்தியடையாத தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை குழு, ‘‘பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு முக்கிய தகவல்களை அளிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்புஇருந்தது மிகவும் கவலை அளிக்கிறது. இதில் விதிமுறை மீறப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இது போன்ற விதிமுறை மீறலுக்கு, செய்தி சேனலில்ஒளிபரப்புக்கு 30 நாட்கள் தடை விதிக்க முடியும். இந்த புதிய விதிமுறை கடந்தாண்டு சேர்க்கப்பட்டதாலும், முதல் முறையாக இது போன்ற சம்பவத்துக்கு நடவடிக்கைஎடுப்பதாலும், அடையாள அபராதமாக செய்தி சேனலின் ஒலிபரப்புக்கு  9-ந்தேதி ஒரு நாள் தடை விதிக்க பரிந்துரை செய்கிறோம்’’ என கூறியுள்ளது. 

எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா கண்டனம்..

என்.டி.டி.வி. இந்தியா சேனலுக்கு ஒரு நாள் ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா பத்திரையாளர் அமைப்பு, அவசரநிலையை நினைவுப்படுத்தும் விதமாக அரசு உத்தரவு இருக்கிறது, இதை உடனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது- 

என்.டி.டி.வி. இந்தியா செய்தி சேனல் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடைவிதித்த, மத்திய தகவல் மற்றும ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் உத்தரவை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்யப் பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

பதான்கோட்டில் நடந்த தாக்குதல் சம்பவங்களை வெளியிட்டது தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என இந்த தடை உத்தரவுக்கு மத்திய அரசு மேம்போக்கான காரணங்களை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. 

என்.டி.டி.வி. சேனல், தாங்கள் வெளியிட்ட காட்சிகளில் தீவிரவாதிகளுக்கு பயன்படும் எந்தவிதமான காட்சிகளும் இல்லை, மற்ற ஊடகங்களைப் போலவே வெளியிட்டோம் என விளக்கம் அளித்துள்ளது. 

ஆனால், என்.டி.டி.வி. செய்தி சேனல் ஒளிபரப்புக்கு ஒருநாள் தடைவிதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு, ஊடகத்தின் சுதந்திரத்தே நேரடியாக பறிப்பதாக அமைந்துள்ளது. அவசரகாலத்தைப் போல், மத்திய அரசு கடுமையான தனிக்கைச் சட்டத்தை இந்திய குடிமகன்கள் மீது திணிக்கிறது. 

ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் அது குறித்து சட்டரீதியான நிவாரணங்கள் பெற தனி மனிதருக்கும், அரசுக்கும் நீதிமன்றங்களும் சட்டங்களும் உள்ளன. 

நீதித்துறையின் உதவியில்லாமல், அனுமதி பெறாமல் இந்த தடை என்.டி.டி.வி. சேனல் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான நீதிபரிபாலன கொள்கையை முற்றிலும் மீறிய செயலாகும். இந்த தடை உத்தரவை உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

கருத்து சுதந்திரம் பறிப்பு

பிராட்காஸ்டர்ஸ் எடிட்டர்ஸ் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

என்.டி.டி.வி. இந்தியா செய்தி சேனலை ஒரு நாள் தடை செய்யும் மத்திய அரசின் முடிவு கேட்டு மிகவும் கவலை அடைகிறோம். மத்திய அரசின் முடிவு,  ஊடகங்களின்ரு த்துச்சுதந்திரத்தை பறிப்பதாகும்.  இந்த உத்தரவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தபின்,  அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்.டி.டி.வி. அதிர்ச்சி....

மத்திய அரசு தடைவிதித்துள்ள தடை உத்தரவைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். மற்ற ஊடகங்கள் வெளியிட்டதைப் போலவே, அதேகாட்சிகளைத்தான் நாங்களும் வெளியிட்டோம். இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறோம் எனத் என்.டி.டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!