Mahendra Sisodia: பாஜகவில் சேருங்க இல்லேனா! காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்த மத்தியப்பிரதேச அமைச்சர்

By Pothy RajFirst Published Jan 20, 2023, 4:59 PM IST
Highlights

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்குகிறது, காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் இல்லாவிட்டால், முதல்வரின் புல்டோசர் தயாராக இருக்கிறது என்று அந்த மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்குகிறது, காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் இல்லாவிட்டால், முதல்வரின் புல்டோசர் தயாராக இருக்கிறது என்று அந்த மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது, அங்கு சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருக்கிறார். இந்த ஆண்டு அந்த மாநிலத்துக்கு சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சி அமைத்தநிலையில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்து ஆட்சியைப் பிடித்தது. ஆதலால், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிகிறது

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்:சிறுநீர் கழிப்பு விஷயத்தில் டிஜிசிஏ அதிரடி

இந்நிலையில் ருதியா நகரில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ பாஜக ஆளும் மற்ற மாநிலங்களைப் போல், மத்தியப் பிரதேச அரசும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடித்து வருகிறது

. இந்த நடவடிக்கையை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “மாமா”(mama) என்று புகழ்ந்து வருகிறார். அதாவது கிரிமினல்கள், குற்றங்களுக்கு எதிராக அரசு பொறுமைகாட்டாது என்பதாகும்

ஆதலால், காங்கிரஸ் உறுப்பினர்களே கவனியுங்கள், ஆளும் பாஜக பக்கம் மெல்ல வந்து சேர்ந்துவிடுங்கள். 2023ல் சட்டசபைத் தேர்தல் வருகிறது, மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிஅமைக்கும். மாமா புல்டோசர் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

எங்கள் அரசின் புதிய ஆட்சேர்ப்பு முறை நெறிப்படுத்தப்பட்டது, வெளிப்படையானது: பிரதமர் மோடி

அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ரகோகார்க் மக்கள் கோழைகள் அல்ல. இதுபோன்ற மிரட்டல்களுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். ரகோகார்க் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பார்கள்”எனத் தெரிவித்தார்

ரகோகார்க் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெவர்தன் சிங் கூறுகையில் “ அமைச்சரின் பேச்சு, அவரின் எதிர்மறையான மனநிலையை வெளிப்படுத்துகிறது. வளர்ச்சி என்ற விஷயத்தை பாஜகவால் வெளிப்படுத்த முடியாது, என்பதால் இதுபோன்று அமைச்சர் பேசுகிறார். மக்களை ஒன்று சேர்க்கும் அரசியலைத்தான் காங்கிரஸ் செய்கிறது, பிரித்தாழும் அரசியல் அல்ல”எனத் தெரிவித்தார்

பாஜக செய்தித்தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி போபால் நகரில் கூறுகையில் “ அமைச்சர் சிசோடியா கூறியது சரியான கருத்துதான். சட்டவிரோத செயல்கள் செய்திருப்போருக்கு அரசுவிடுக்கும் எச்சரிக்கை, அவர்களின் சொத்துக்களை இடிக்க புல்டோசர் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

click me!