கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 11.38 லட்சம் பேருக்கு வேலை… மோடி அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published May 27, 2019, 8:51 PM IST
Highlights

கடந்த மார்ச் மாதத்தில் 11.38 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் ஈட்டுறுதி கழக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. 
 

கடந்த 2104 மக்களவைத் தேர்தலின் போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின..

இந்நிலையில் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (இஎஸ்ஐ) சமீபத்திய புள்ளி விவரப்படி, கடந்த 2018-19 நிதியாண்டில் அமைப்பு சார்ந்த துறைகளில் 1.48 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 67.59 லட்சம் பேர், சமூக பாதுகாப்பு  திட்டங்களில் புதிதாக சேர்ந்துள்ளனர் என்றும் . கடந்த மார்ச் மாதத்தில் 11.38 லட்சம் தொழிலாளர்கள் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று, இஎஸ்ஐ பலன்களில் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முந்தைய மாதத்தில் இந்த எண்ணிக்கை 11.02 லட்சமாக இருந்தது என இஎஸ்ஐ  புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

click me!