இனி இலவச கால் கிடையாது…. வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ ! - ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் !

By Selvanayagam PFirst Published Oct 9, 2019, 10:10 PM IST
Highlights

இது வரை ஜியோ போனில் இருந்து வேறு போன்களுக்கு அழைக்கும் கால்கள் இலவசமாக இருந்த நிலையில் தற்போது ஜியோவில் இருந்து ஜியோவிற்க்கு மட்டுமே இலவசம் என்றும் மற்ற நெட்வொர்க்கிற்க்கு கால் செய்தால் ஒரு நிமிடத்துக்கு ஆறுபைசா கட்டணம் எனவும்  ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 

தனியார் தொலைத்தொடர்பு துறையினர் ஒரு காலத்தில் இண்டர்நெட் டேட்டாக்களுக்கு அதிக கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் பெற்ற நிலையில் திடீரென இந்த துறையில் நுழைந்த ஜியோ, தினமும் ஒரு ஜிபி இலவசமாக வழங்குவதாக அறிவித்தவுடன் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். 

மேலும் ஒருசில மாதங்களுக்கு ஒருமுறை சலுகைகளை வாரி வழங்கியதால் ஜியோ சிம் வாங்க பலர் ஆர்வம் காட்டினர். குறிப்பாக எந்த சிம்முக்கு பேசினாலும் இலவசம் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது ஜியோ சிம் வைத்துள்ளவர்கள் ஜியோ சிம் வைத்துள்ளவர்களுடன் பேசினால் மட்டுமே இனி இலவசம் என்றும், ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடோபோன் சந்தாதாரர்களுடன் பேச கட்டணம் என்றும் தற்போது ஜியோ அறிவித்துள்ளது.


 
அதேபோல் லேண்ட்லைனுக்கு அழைத்தால் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல். வோடோபோன் சந்தாதாரர்களுடன் பேச நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என்று அறிவித்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் அதற்கு பதிலாக இலவச டேட்டா வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவசரப்பட்டு பலர் ஜியோவுக்கு மாறிவிட்டோமே என்று கூட பலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்

click me!