சசிகலா அறையில் திடீரென நுழைந்த போலீஸ்... பரபரக்கும் பரப்பன அக்ரஹார சிறை..!

By vinoth kumarFirst Published Oct 9, 2019, 2:46 PM IST
Highlights

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று சிறைக்கு சென்று சசிகலா உள்ளிட்ட கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 37 கத்திகள், கஞ்சா புகைக்கும் கருவிகள், செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கைதிகளுக்கு இந்த பொருட்களை சப்ளை செய்தவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!