ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெற்றது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது. மே 2023 இல் G-20 சுற்றுலா பணிக்குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.
சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டு கொண்டாட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கும் வேளையில், அந்த நடவடிக்கையின் தாக்கங்களை பகுப்பாய்வு செய்வது அவசியமாகிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 370, அசாதாரண அரசியல் மற்றும் வரலாற்று சூழ்நிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைப்பது குறித்து மகாராஜ் ஹரி சிங்கால் முடிவெடுக்க இயலாமையால், அக்டோபர் 1947இல் பாகிஸ்தான் ஆதரவுடன் பழங்குடியினரின் படையெடுப்பை கட்டவிழ்த்துவிட்டனர். அதை இந்தியப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மகாராஜா ஹரி சிங்குடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே இந்திய அரசாங்கம் தனது ராணுவப் படைகளை திரும்பப்பெற்றது. 370வது பிரிவு மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
அப்பம், அடை, அவியல், பணியாரம்... ஒரு பிடி பிடித்த பிரதமர் மோடி! தென்னிந்திய உணவு குறித்து புகழாரம்!
பிரிவு 370 இல் என்ன தவறு?
சட்டப்பிரிவு 370 பிற்காலத்தில் பிரிவினைவாதத்துக்கு வித்திட்டது. அழிவின் பாதையைக் கொண்டுவந்தது. பிரிவு 370 என்பது உலகமயமாக்கலுக்கு முந்தைய காலத்தின் குறுகிய கருத்தாக்க அரசியலின் விளைபொருளாகும். அடுத்து வந்த மாநில அரசுகளால் 370வது பிரிவு தவறான வகையில் பயன்படுத்தப்பட்டது. புது தில்லியில் இருந்து சலுகைகளைப் பெற பிரிவினைவாத உணர்வுகளை மறைமுகமாகத் தூண்டி, எதிரிகளின் பிடியில் சிக்கிய காஷ்மீருக்கு தங்களை மீட்பர்களாக காட்டிக்கொண்டனர்.
மக்கள்தொகை மாற்றம், அடையாளங்களை இழத்தல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அபகரித்தல் மூலம் மக்களிடையே பீதி மற்றும் பாதுகாப்பின்மையை உணர வைக்க 370வது பிரிவு பயன்படுத்தப்பட்டது. காஷ்மீருக்கு 370வது பிரிவின் மிக மோசமான விளைவாக, மாநிலத்திற்குள் ஆபத்தான அரசியல் போக்கை வளர்க்கப்பட்டது.
பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மீட்பு நாளாக அமைந்தது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால் காஷ்மீரில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்ற கட்டுக்கதை முறியடிக்கப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், மக்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் கிளர்ச்சி ஏதும் செய்யாமல் மறைமுகமாக வரவேற்றனர். மாற்றத்திற்கு யாரும் ஏழாததால் ஒரு ஆன்மா பாதிக்கப்படவில்லை.
பிரிவினைவாதத்தின் சேதத்திலிருந்து ஜம்மு காஷ்மீரைக் காப்பாற்றுவதற்கான தூண்டுதலால் பிரிவு 370 நீக்கப்பட்டது. பொதுவாக மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், தங்கள் வாழ்க்கை இலக்குகளை மாற்றிக்கொள்ள உதவியது. ஒரு புதிய நம்பிக்கை அலை எழுந்தது. ஏழைப் பெற்றோர் இளைஞர்கள் இனி பயங்கரவாதத்தின் படுகுழியில் விழமாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவானது. அரசியல் விவகாரங்களில் அதிக மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. மேற்கு பாகிஸ்தான் அகதிகள், காஷ்மீரி பண்டிட்டுகள், பெண்கள் மற்றும் பஹாரி மொழி பேசும் மக்கள் போன்ற முன்னர் ஒதுக்கப்பட்ட குழுக்கள் இப்போது அதிகாரம் அளிக்கப்பட்டு சமமான குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும் சந்திரயான்-3! இன்று இரவு 7 மணிக்கு முக்கிய நகர்வு!
இந்த மாற்றம் பிற்போக்கு மற்றும் பாரபட்சமான பாதுகாப்புவாத பரம்பரை குடியுரிமை உரிமைகளை நீக்கியது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஆற்றல்மிக்க உலகளாவிய நிலப்பரப்பில், மக்கள் பயணம் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் கிடைத்துள்ளது. அவர்கள் அப்பகுதியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர்.
34 ஆண்டுகளில் முதன்முறையாக, முஹர்ரம் துக்கம் அனுசரிப்பவர்கள் ஸ்ரீநகர் நகரில் அமைதியான துக்க ஊர்வலத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அரசின் மீதான பொது அதிருப்தியின் முந்தைய ஆண்டுகளில் தேர்தல் அரசியலில் பொதுமக்களின் தீவிர ஈடுபாட்டிற்கு வழிவகுத்தது.
மசூதிகள் மற்றும் தர்காக்கள் இப்போது மத நல்லிணக்கம் மற்றும் தேசபக்தி பற்றிய கருத்துக்களை ஊக்குவிக்கின்றன. ஆசிட் தாக்குதல் அல்லது பயங்கரவாத பழிவாங்கும் அச்சுறுத்தல் இல்லாமல் பெண்கள், தொழில் முனைவோர் தங்கள் பணிகளில் ஈடுபடலாம்.
சட்டப்பிரிவு 370க்குப் பிந்தைய காலத்தில் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் மாலை நேர விளையாட்டு நிகழ்வுகளில் மக்கள் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. பல்வேறு முதலீட்டாளர்களுடன் அன்னிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி குறித்த நம்பிக்கைக்கு வலுசேர்த்துள்ளது.
2000ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் காஷ்மீர் உலகின் மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்பட்டது. இப்போது, அதே பகுதியில் மே 2023 இல் G-20 சுற்றுலா பணிக்குழுக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 60 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மொத்தத்தில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெற்றது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
இன்டர்நெட் இல்லாமலே மொபைலில் டிவி பார்க்க முடியுமா? புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு