ஜம்மு காஷ்மீரில் 9 மணிநேரம் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகளை சுட்டுவீழ்த்திய ராணுவ வீரர்கள்

By Selvanayagam PFirst Published Sep 28, 2019, 10:55 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீரில் ரம்பம் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் 9 மணிநேரம் நடத்திய நீண்ட தேடுதல் மற்றும் போராட்டத்துக்குப்பின் தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்

ரம்பன் மாவட்டத்தில் உள்ள படோடி பகுதியில் 5 தீவரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் ஏறக்குறைய 9 மணிநேரம் தேடுதலில் ஈடுபட்டு தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். ஆனால், தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஓடி ஒளிந்தனர்.

அந்த வீட்டின் உரிமையாளரை பிணையக் கைதியாக தீவிரவாதிகள் பிடித்துவைத்துக் கொண்டு மிரட்டனார்கள் ஆனால் பாதுகாப்பு படையினர் சாதுர்யமாச் செயல்பட்டு வீ்ட்டில் இருந்தவர்களை வெளியேற்றியபோதும்,வீட்டு உரிமையாளர் மட்டும் சிக்கினார்

அப்போது பாதுகாப்பு படையினர் எதிர்பாராத நேரத்திதல் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் சுட்டனர். நீண்டநேரம் நடந்த துப்பாக்கி்ச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், அந்த வீட்டில் இருந்த உரிமையாளர் காயமின்றி மீட்கப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இன்னும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் அந்த வீடு இருக்கும் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

click me!